மழலைகள்.காம் - இதழ் 6

இதழ் 6: 14 ஜனவரி 2007


Mazalais

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், குழந்தைகளின் புகைப்படங்கள், குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், படப்புதிர்கள், படம் வரைதல் மற்றும் கதை சொல்லும் போட்டிகள், அழகியின் துணையுடன் கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, அறிவை வளர்க்கும் கட்டுரைகள், ஆன்மீகக் கட்டுரைகள் மற்றும் பல

1) Learn Tamil - தமிழ் கற்க
Learn to Create Tamil contents in all windows applications கணிணியில் தமிழைப் பொறிக்கக் கற்போம் வாரீர்

2) ராகவேந்திரர் நாம மகிமை!!

எடுத்த செயல்கள் அனைத்தும் இங்கே வெற்றி பெறவே நாடுவோம்! எனையும் காக்கும் இறைவன் நாமம் இனிய தமிழில் பாடுவோம்!! - பாடல்: சந்தக்கவி செபரா

3) பாரோர் புகழ்ந்தேத்தும் நாராயணன்

ஆண்டவனின் அருள்தனையே அனுதினமும் நாடி ஈண்டு இப்பாவைகள் இனிய தமிழில் பாடி (தன்) மெய்
தீண்டுபவர் நாளுமிங்கு திருமாலின் அடியவராய்
வேண்டிடுவார் அவர்தம் வேண்டுதலும் நலம் தரவே!! - பாடல் எழுதியவர்: சந்தக்கவி செபரா

4) அன்பே வழியாய்

"அண்ணா, அண்ணா, என்னைப் பார்" என்று அவன் தோளை உலுக்கினாள் அன்பு. "என்ன அன்பு, உனக்கு என்ன வேண்டும்?" என்று தன் புத்தகத்திலிருந்து கவனத்தைத் தன் தங்கையிடம் திரும்பிய பீட்டர் அதிர்ந்தான். - சிறுகதை - எழுதியவர்: சுகந்தி

5) மஹாகவி பாரதியின் கதைகள்

கவிராயருக்கு மகா கோபம் வந்து விட்டது. உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறைலிருந்த சாமான்களையும் கருவிகளையும் தாறு மாறாக மாற்றி வைத்துக் குழப்பமுண்டாக்கத் தொடங்கினார். - எழுதியவர்: பாரதியார், சொன்னவர்: தாத்தா சீனு

6) WATER - How Precious it is!

Every drop of water, Is important for future; Save every drop of it, - English poem by Sruthi Srinivasan 7th standard

7) Quiz - பொது அறிவு வினா விடை Titanic

Quiz question and answer written by Parvamani

8) Picture Puzzle - படப்

புதிர்


Find the difference between two seemingly identical colorful sketches drawn by kids - ஒன்று போலுள்ள இரு வண்ணச் சித்திரங்களிடையே வேறுபாடு காண்க

9) ஒரு கவிஞனின் பொங்கல் விருந்து

மழைக்கால மாலை மணிவானில் தோன்றும் தொடுவானில் துவங்கி நடுவானில் நிற்கும் - கவிதைகள் - எழுதியவர்: நவீனகவி வெற்றி வளவன்

10) தாத்தா கற்ற கல்வி

ஒரு கடையில் கணக்கெழுதும் வேலை இருந்தது. ஆனால் தாத்தா படிக்காதவராக இருந்ததால் அந்த வேலையும் தாத்தாவுக்குக் கிடைக்கவில்லை. எங்கே வேலை கேட்டுப் போனாலும் என்ன படித்திருக்கிறாய் என்று தான் கேட்டார்கள். அப்போதுதான் சின்ன வயதில் படிக்காதது எவ்வளவு தவறு என்று தாத்தாவுக்கு தெரிந்தது. - சிறுகதை - எழுதியவர் வெற்றி வளவன்

11) உலகம் போற்றும் அறிஞர்கள்

பியரி க்யூரி என்பவர் ஒரு ஆய்வுக் கூடம் வைத்திருந்தார். ஆகையால் க்யூரிக்கு மேரி 1894ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். தன் ஆய்வுக்கூடத்தில் வசதிகள் குறைவாக இருந்தபோதிலும் மேரியை ஆராய்ச்சி நடத்த அனுமதித்தார். - மேரி க்யூரி வரலாறு - எழுதியவர்: பார்வமணி

12) களிமண்

எடுத்த எடுப்பில் உடனே வேலை செய்யுமாறு பணித்து வாழ்வை இயந்திரத்தனமாக அமைக்காமல் தெய்வத் திருப்பணியை மன நிறைவுடன் செய்வதற்கேற்ற மனநிலையையும் உற்சாகத்தையும் உருவாக்கிக் கொள்ள அவகாசம் கொடுத்து அதன் பின்னர் பணியில் ஈடுபாட்டை ஏற்படுத்தும் விதமாக ஸ்தபதி அவனைத் தயார் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. -
தொடர்கதை - எழுதியவர்: ஆகிரா

13) பகவத் கீதா ஸாரம்

உபநநிஷதுக்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துத் திரட்டி ஒரு பசுவாக அமைத்து, அர்ஜுனனை அதன் கன்றாகக் கருதி, அம்ருதமான கீதையைப் பாலாக அமைத்து, அதைக் கறப்பதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை வைத்து உலகிலுள்ள நாம் எல்லாம் உய்ய இந்த அம்ருதத்தை நாம் பருக வழிவகுத்தது மிக மஹத்தான காரியம். - எழுதியவர்: அசலம்

14) Night - இரவு

வண்ணக்கலை ஓவியம் Artwork by V Krithika, I Standard

15) ஏசு பிறந்தார்!

ரோம் என்ற நாட்டை ஜீஸர் அகஸ்டு என்பவன் ஆண்டு வந்தான். அவன் ஒரு தடவை ஒரு ஆணை இட்டான். அது என்னவென்றால் யூதர் என்ற பிரிவு ரோம் நகரத்திற்குள் வந்தால் வரி செலுத்த வேண்டும். இதனால் பல யூதர்கள் கஷ்டப்பட்டனர். ஜோஸஃப், மேரி இருவரும் இந்தக் கஷ்டத்தைத் தவிர்க்க அந்த நகரை விட்டு பெத்லகேம் வந்தனர், - எழுதியவர்: இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

16) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

அன்பின் வழியாக அரங்கணைக் கவர்ந்த காரணத்தால் கோதை என்ற பெயர் போய் அரங்கன் ஆட்கொண்டதால் ஆண்டாள் என்றும், மாலையை அணிந்து கொண்டு பின் கண்ணனுக்கு அணிவிக்கக் கொடுத்தமையால் பெரியாழ்வார் அவளைச் சூடிக் கொடுத்த சுடக் கொடியே என்று புகழுகிறார். - ஆண்டாள் கதை - எழுதியவர்: இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

17) பொங்கலோ பொங்கல்

சூரியன் மகர ராசியில் அதாவது பூமத்ய ரேகையிலிருந்து வடக்குப் பக்கம் போக ஆரம்பிக்கும் முதல் நாள் நமது பொங்கல் திருநாள். சூரியன் இத்தகைய நிலையிலுள்ள காலத்தை சமஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள். -
கட்டுரைக்கவிதை - எழுதியவர்: இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

18) தியாகபிரம்மம்

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும். அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனங்களைப் பாடுவார்கள். - கட்டுரை - எழுதியவர்: இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

19) எந்தையும் தாயும்

"எவன் ஒருவன் ஒழுக்கத்துடன் வாழ்கிறானோ, அவனே அந்தணனாவான். எவ்வளவு உயர்ந்த குடியில் பிறந்தாலும் ஒழுக்கம் கெட்டவன் ப்ராம்மணன் ஆக மாட்டான்" - கட்டுரை எழுதியவர்: ஆகிரா

20) வாழ்வின் ரகசியம்

இந்தப் பரம்பொருள் தன் சக்தியால் தானே உலகமாகவும், இயற்கையாகவும், ஜீவஜாலங்களாகவும் மாறி செயல் படுகிறது. உலகத்தின் உருப்புகள் எவை? ப்ருதிவ்யப் தேஜோ வாயுவாகாச்: எனப்படும் பஞ்சபூத வடிவம் தான் உலகம். - உன்னையே நீ அறிவாய்- எழுதியவர்: அசலம்